நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கிவைப்பட்டது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிய நிர்வாக மற்றும் வட்டார பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரைக்கார், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹீர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான கலீல் முஸ்தபா, எஸ்.எம். சபீஸ், மனாப் மற்றும் ஜெளபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






















