புத்தளம், நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலீம் பட்டமளிப்பு விழா
புத்தளம், நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலீம் பட்டமளிப்பு விழா நிகழ்வு நேற்று (24), மௌலவி முபாரக் (ரஸூலி) தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹிர் மரைக்கார், ஆசிரியர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளர்களாக அப்துல் நாசர் (ரஹ்மாணி), அல்-ஹாபிழ் நஸ்மின் (உஸ்மானி), நூறுல் அமீன் (போசகர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







