சம்மாந்துறை பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் வழங்களும், இளைஞர் சந்திப்பும்!
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் வழங்களும், இளைஞர் சந்திப்பும் 14.06.2026 சம்மாந்துறை பிரதேச சபையின் விளையாட்டு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான அப்னான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிய நிர்வாக மற்றும் வட்டார பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரைக்கார், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹீர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான முபீத், சபீஸ் மற்றும் காதர் ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
























