1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றத் திட்டங்களின் கீழ் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். அவ்வாறான குடியேற்றத் திட்டங்களில் ஒன்றாக புத்தளத்தில் உருவாக்கப்பட்ட அல்-காசீம் சிட்டி, இன்று முன்னேற்றமிக்க குடியிருப்புப் பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஒருகாலத்தில் வெறிச்சோடியிருந்த நிலப்பரப்பில் சுமார் 500 வீடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமம், தற்போது கல்விமான்கள், உலமாக்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சமூகத்தினரை உருவாக்கிய சிறந்த குடியிருப்புப் பகுதியாக திகழ்கிறது.
அல்-காசீம் சிட்டியின் 19ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, “காசீமியா நினைவு நாள்” நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (02) அல்-காசீம் சிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் போது, இக்கிராமம் உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய வெளிநாட்டு நன்கொடையாளர் சுல்தான் பின் அல்-காசிமி அவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் விசேட துஆ பிரார்த்தனையும், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன இக்கிராம மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில், அல்-காசீம் சிட்டி உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹிர் மரைக்கார், பிரதேச மற்றும் நகர சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் என பலரும் கலந்துகொண்டனர்.
- ஊடகப்பிரிவு –




















