அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மகளிர் சந்திப்பு!
“ஒற்றுமையின் பலம் வெற்றியின் வழி” என்னும் தொனிப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைபிரதேச மகளிர் சந்திப்பு நிகழ்வு (14.06.2026) சம்மாந்துறை SS உள்ளக விளையாட்டு அரங்கில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹிர் மரைக்கார், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான சபீஸ்,ஜெளபர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மகளிர் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



















