மட்டக்களப்பு, கல்குடா தொகுதி வட்டார ரீதியான நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த (16) வைத்து வழங்கிவைப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஹலால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரைக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா தொகுதியின் வட்டார அமைப்பாளர், இளைஞர் அமைப்பாளர் மற்றும் மகளிர் அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் கட்சியின் தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டது.
#ACMC #RishadBathiudeen #PartyReorganization #ConnectWithACMC #PeopleFirst #Oddamavadi #batticoloa #ACMCoddamavadi #Kalkudah #AmeerAli #acmcparty #ACMCLK

















