Representatives of Tamil and Muslim Political Parties Meet President Anura Kumara | ACMC PARTY
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (#ACMC) சார்பில் அதன் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர், என்.ரீ.எம்.எம். தாஹிர் மரைக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) சார்பில் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நிசாம் கரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
දෙමළ, මුස්ලිම් දේශපාලන පක්ෂ එකමුතුව ජනපති හමු වෙයි
දෙමළ සහ මුස්ලිම් දේශපාලන පක්ෂ 06ක් එක්ව පිහිටුවා ගත් එකමුතුවේ නියෝජිතයින් සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතර හමුවක් අද (03) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී පැවැත්විණි.
සමස්ත ලංකා මහජන කොංග්රසය (ACMC) නියෝජනය කරමින් එහි සභාපති එම්.එස්.එස්. අමීර් අලී, පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන එම්.ඒ.එම්. තාහීර්, එන්.පී.එම්.එම්. තාහීර් යන මහත්වරුද, ලංකා කම්කරු කොංග්රසය (CWC) නියෝජනය කරමින් පාර්ලිමේන්තු මන්ත්රී ජීවන් තොණ්ඩමන් මහතාද, ප්රජාතන්ත්රවාදී දෙමළ ජාතික සන්ධානය (DTNA) නියෝජනය කරමින් සෙල්වම් අඩෛක්කලනාදන්, සුරේෂ් ප්රේමචන්ද්රන්, මුරුගේසු චන්ද්රකුමාර් යන මහත්වරුද, ඉලංගෙයි තමිල් අරසු කච්චි (ITAK) නියෝජනය කරමින් එම්.ඒ. සුමන්තිරන්, පාර්ලිමේන්තු මන්ත්රී ෂානක්යන් රාසමානික්කම්, ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසය (SLMC) නියෝජනය කරමින් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන රවුෆ් හකීම්, නිෂාම් කාරියප්පර් යන මහත්වරුද, දෙමළ ප්රගතිශීලී සන්ධානය (TPA) නියෝජනය කරමින් වී. රාධක්රිෂ්ණන්, භරත් අරුල්සාමි යන මහත්වරුද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ. See less

Chairman of All Ceylon Makkal Congress


Organizer – Puttalam District

