குருணாகல் பிரதிமேயர் அஸாருடீன் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் | ACMC Suspends Kurunegala Deputy Mayor’s Party Membership
குருணாகல் பிரதிமேயர் அஸாருடீன் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் : அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (acmc)
குருணாகல் மாநகர சபையின் ஒப்பந்த செயல்முறை தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய செயல்முறையுடன் தொடர்புபட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மெய்னுடீனின் கட்சி உறுப்புரிமை உடனுக்குக்கு அமுலுக்குவரும் வகையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் சட்டவிவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), ஊழலுக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதிக்கும் எந்தவொரு நடத்தைக்கும் எதிராக உறுதியான மற்றும் சமரசமற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. பொது நம்பிக்கையை சீர்குலைக்கும் அல்லது நாம் நிலைநிறுத்தும் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு கொள்கைகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் கட்சி அனுமதிப்பதில்லை. நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும். சட்டம் எந்தத் தலையீடும் இன்றி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சி நம்பிக்கை கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கிறது.
குறிப்பிடப்பட்ட நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவருடைய தனிப்பட்ட செயல்களாகும்; அவை கட்சியின் கொள்கைகள், விழுமியங்கள் அல்லது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தின் முன்னேற்றங்களை கட்சி தொடர்ந்து கவனித்து வருவதுடன், தனது அரசியலமைப்பும் ஒழுக்காற்று நடைமுறைகளும் ஏற்படுத்திய விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.” எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ACMC Suspends Kurunegala Deputy Mayor’s Party Membership Over Bribery Allegations
The All Ceylon Makkal Congress (ACMC) has announced the immediate suspension of the party membership of Kurunegala Deputy Mayor M. Ashardeen Moinudeen following his arrest by the Commission to Investigate Allegations of Bribery or Corruption over alleged bribery-related charges.
In an official statement issued by Mr. Rushdie Habeeb, Director – Legal and Constitutional Affairs of ACMC, the party stated that the suspension will remain in effect pending the outcome of investigations and any subsequent legal proceedings.
The ACMC emphasized that it maintains a strict zero-tolerance policy against corruption and any conduct that undermines public confidence and accountability in public office.
The statement further noted that the alleged actions are of a personal nature and do not reflect the values, principles, or official position of the party, adding that ACMC will continue to monitor the matter closely and take any further action required under the party’s constitution and disciplinary procedures.
සමස්ත ලංකා මහජන කොංග්රසය (ACMC)
2026.05.09
මාධ්ය නිවේදනය
නාගරික ටෙන්ඩර් ක්රියාවලියකට අදාළව අල්ලස් ලබා ගැනීම සම්බන්ධ චෝදනා මත, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව විසින් අත්අඩංගුවට ගනු ලැබූ බවට ලැබුණු වාර්තාවලින් පසුව, එම්. අෂාඩීන් මොයිනුදීන් (Mr. M. Ashardeen Moinudeen) මහතාගේ පක්ෂ සාමාජිකත්වය අද සිට ක්රියාත්මක වන පරිදි වහාම අත්හිටුවීමට සමස්ත ලංකා මහජන කොංග්රසය (ACMC) තීරණය කර ඇති බව මහජනතාව වෙත දන්වා සිටියි.
දූෂණයට එරෙහිව සහ මහජන විශ්වාසය මෙන්ම නීතියේ ආධිපත්යය පළුදු කරන ඕනෑම හැසිරීමකට එරෙහිව සමස්ත ලංකා මහජන කොංග්රසය දැඩි සහ සම්මුති විරහිත ප්රතිපත්තියක් අනුගමනය කරයි. මහජන පදවි නාමයන්ට හෝ අප පක්ෂය අගය කරන අඛණ්ඩතාව සහ වගවීම පිළිබඳ මූලධර්මවලට කැළලක් ඇති කරන කිසිදු ක්රියාවක් පක්ෂය අනුමත නොකරයි.
දැනට පවතින විමර්ශනවල සහ ඉන් අනතුරුව සිදු කෙරෙන ඕනෑම නීතිමය කටයුත්තක ප්රතිඵලය ලැබෙන තෙක් මෙම අත්හිටුවීම බලාත්මක වේ. කිසිදු බාධාවකින් තොරව නීතිය ක්රියාත්මක වීමට ඉඩ දිය යුතු බව පක්ෂය විශ්වාස කරන අතර අදාළ බලධාරීන් සමඟ පූර්ණ සහයෝගයෙන් කටයුතු කිරීමට අපේක්ෂා කරයි.
අදාළ පුද්ගලයාගේ මෙම ක්රියාවන් සම්පූර්ණයෙන්ම ඔහුගේ පෞද්ගලික මට්ටමින් සිදු වූ ඒවා වන අතර, ඒවා පක්ෂයේ වටිනාකම්, මූලධර්ම හෝ නිල ස්ථාවරය පිළිබිඹු නොකරන බව සමස්ත ලංකා මහජන කොංග්රසය අවධාරණය කිරීමට කැමතිය.
පක්ෂය මෙම කරුණ සම්බන්ධයෙන් සිදුවන වර්ධනයන් සමීපව නිරීක්ෂණය කරන අතර, පක්ෂ ව්යවස්ථාවට සහ විනය ක්රියා පටිපාටිවලට අනුකූලව අවශ්ය ඕනෑම ඉදිරි පියවරක් ගනු ඇත.
රුෂ්ඩි හබීබ් (Rushdie Habeeb) LLM, MBA, නීතිඥ,
අධ්යක්ෂ – නීති සහ ව්යවස්ථාපිත කටයුතු
සමස්ත ලංකා මහජන කොංග්රසය (ACMC)
See less