இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சீனா நாட்டில் நடைபெறவுள்ள 10 நாட்கள் கொண்ட அரசியல் செயற்பாட்டு செயலமர்வில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களும் 04 அதிகாரிகளும் அடங்கிய குழுவினர் சீனா நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் அவர்களும் நேற்றைய (24.05.2026) தினம் சீனா நாட்டிற்குத் தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், அரசியல் மற்றும் சமூக ரீதியிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இப்பயணம் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.